இந்திய குற்றவியல் தண்டனைத்தில் கூர்ந்து நோக்கக் கூடியது போக்ஸோ சட்டம். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை வேரருக்கவே அதிகமாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விடுக்கப்படும் நேரடி, மறைமுக தொந்தரவுகளை தடுக்க இந்த சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.
விஞ்ஞானத்தின் மூலமாக மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது இன்றைய நவ நாகரீக வாழ்க்கை. அதிலும் குறிப்பாக ஆன்ட்ராய்ட் போன்களின் வருகைக்கு பிறகு அதனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதனுடைய முழுப் பலன்களை அடைய முடியும் என்பது தெரிந்ததே.
பத்தினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தருபவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இந்த சட்டத்தின் மூலம் இதுவரை பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பலருக்கும் இருந்து வந்த பிரட்சனைகளை குறைந்து வந்தது என்று சொல்லாலாம். இப்படியிருக்கையில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பல சமயங்களில் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி இளைஞர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஆணும், பெண்ணும் காதலித்து விருப்பப்பட்டு உறவு கொள்ளும் போது, அவர்கள் மீது போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் தனது மகளை கடத்திச் சென்றதாக தந்தை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சதீஷ் என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மீது தான் இந்த கருத்தை சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம்.