Latest News
தெலுங்கானா மாணவர்களை சந்திக்க தைரியம் இருக்கா?…ராகுல் காந்திக்கு பா.ஜ.க. மந்திரி சவால்..
தெலுங்கானாவின் முதல் அமைச்சராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கு படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார். மா நில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்.
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பரவுகிறது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து பேசிய பண்டி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை நேரில் சந்திக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா என சவால் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் வேலை வாய்ப்பு இல்லாததால் மாணவர்களும், படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நேரத்தில் அங்குள்ள விவசாயிகளுக்கு பிரதமந்திரி கிஸான் சம்மான் திட்டத்தின் நிதியை வெளியிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உள்ளார் என்றார். அதே போல தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அங்குள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள வெறுப்பை காட்டியுள்ளது என்றார்.
தெலுங்கானா மக்கள் இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிவை விட பிரதகர் மோடியின் ஆட்சியை தான் விரும்புவதாகக் கூறினார். அதே நேரத்தில் தெலுங்கானாவில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அதிகரித்து வருவதை தான் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க.விற்கு கிடைத்துள்ள வாக்குகள் சுட்டிக் காட்டியுள்ளதாக சொல்லியிருந்தார் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்.