---Advertisement---

எனக்குப் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட்தான்…கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

By Sri
Published on: April 4, 2020
---Advertisement---

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தனக்கு மிகவும் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட்தான் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்போது நடந்து கொண்டிருக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்லன. இந்நிலையில்  வீட்டுக்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்காக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் கிரிக்கெட் வீரர்களை நேர்காணல் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் கேப்டன் கோலியை அவர் இன்ஸ்டாகிராமில் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் கோலிக்கு பிடித்த வடிவிலான போட்டி எது என்ற கேள்வியை எழுப்பினார். அந்த கேள்விக்குப் பதில் அளித்த கோலி ‘எனக்கு எப்போதும் பிடித்தது டெஸ்ட் பார்மட்தான். அதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. நாம் ரன்கள் எடுக்காத போதும் ஹோட்டலுக்கு சென்று மீண்டும் வந்து போட்டியில் விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விட ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிக சாதனைகளை செய்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளின் முடிசூடா மன்னனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க