---Advertisement---

கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

By Sri
Published on: April 6, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பாதிப்பால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபி சென்று அங்கே வாடகைக் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக எந்த வேலையும் இல்லாமல் வருவாயும் இல்லாமல் கஷ்டத்தில் இருந்த அவருக்கு ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

ஜிஜேஷ் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி ‘பிக் டிக்கெட் லாட்டரி’ சீட்டினை வாங்கியுள்ளார். இதற்கானக் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா காரணமாக இணையத்தில் நடந்துள்ளது. குலுக்கலில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர் 40 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

இந்நிலையில் அந்த பணத்தை வைத்துக் கொண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும், மகளின் படிப்புக்காக செலவு செயயப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the premiere and features of Nayanthara's Mookuthi Amman 2.

சுந்தர் சி-யின் ‘அம்மன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’: நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ஸ்பெஷல் ரிவ்யூ!

Editorial visual wishing Sai Abhyankkar a happy birthday and showcasing his upcoming movie lineup.

பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் அபயங்கர்: தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு படங்களுடன் மெகா லைன்-அப்பில் இளம் இசைப் புயல்!

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!