கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பிரச்சினை இப்போதான் கொஞ்சம் தணிந்து மக்கள் லேசாக மூச்சு விட ஆரம்பித்துள்ளனர். அதற்குள் இங்கிலாந்தில் இருந்து வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி விட்டதாக புதிய தகவல் பரவிய நிலையில் ஒவ்வொரு மாநிலமும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு நேரத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.







