---Advertisement---

வங்கதேச வன்முறையுடன்… விவசாயிகள் போராட்டத்தை ஒப்பிட்ட கங்கனா… சர்ச்சை பேட்டி…!

By Sri
Published on: August 26, 2024
---Advertisement---

விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாஜக அரசுக்கு எதிராக போராடி அனைத்து விவசாயிகளையும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா ஏற்கனவே பேசியிருந்தார். இதனால் அந்த பெண் காவலர் கங்கனா கன்னத்தில் அறைந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சையான கருத்தை பேசி இருக்கின்றார்.

கங்கனா ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது.

போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்கள் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க கூடும் என்று பேசி இருக்கின்றார். இந்த கருத்துக்கு பாஜக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது.

இதுபோன்ற சர்ச்சையான கருத்துக்களை கங்கனா வெளியிடக்கூடாது என்று பஞ்சாப் பாஜக மூத்த தலைவர் கூறியிருக்கின்றார். இன்னும் சில வாரங்களில் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கங்கனாவின் இந்த கருத்துக்கு பாஜகவினரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க