---Advertisement---

IPL 2019 : பஞ்சாப் எதிர்பாராத வெற்றி! டெல்லி மோசமான தோல்வி!!

By Sri
Published on: April 2, 2019
KXIP vs DC highlights 2019
---Advertisement---

மொஹாலியில் நேற்று இரவு நடந்த ஐ.பி.எல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.பஞ்சாப் அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக குரன் இடம் பெற்றிருந்தார்.

முதலில் பேட் செய்த கே.எல். ராகுல் 1 சிக்ஸ், 2 பவுன்டரி அடித்து 11 பந்துகளில் 15 ரன் எடுத்து எதிர்பார்காத நிலையில் வெளியேறினார்.எஸ். குரன் 20 (10), அகர்வால் 6 (9) நிலைக்கவில்லை. பின் சர்ஃபராஸ் கான் 6 பவுன்டரிகளுடன், 29 பந்துகளில் 39 ரன் எடுத்து அவுட்டானார். மில்லர் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.மந்தீப் சிங் 29 (21) ரன் எடுத்தார்.இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில்,166/9 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் ப்ரித்விஷா 0 (1)ல் வெளியேறினார். தவன் 35 (20), ஷ்ரையஸ் 28 (22), ரிஷப் பண்ட் 39 (26), இன்கிராம் 38 (29) எடுத்தனர்.16 வது ஓவரில், 144/4 என்று விளையாடிய டெல்லி அணி, அடுத்த ஓவரில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. வெறும் 22 ரன்கள் எடுக்க தடுமாறி, விக்கெட்களை பறிகொடுத்து தோல்வி அடைந்தது, டெல்லி அணி.இறுதியில், 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  2019 ஐபிஎல் போட்டி நிறைவு - கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்

இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.