---Advertisement---

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட… இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை… காரணம் என்ன..?

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் பிரபலமாக இருந்த இன்ஸ்டா பிரபலம் திடீரென்று தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னைத்தானே முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதன் மூலமாக மிகப் பிரபலமானவர்தான் சோலோகெமி. சமீப காலமாக பிரபலமாகி வந்த இவர் பெயர் குப்ரா அய்குட் இவருக்கு 26 வயதாகின்றது.

துருக்கியை சேர்ந்த இவர் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான செலிபிரிட்டி. இவர் நேற்றைய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் இருக்கும் அவரின் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் உயிரிழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் அவர் கடைசியாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் உடல் எடையை அதிகரிப்பது மிக சவாலாக இருக்கின்றது. நான் விரைவில் உடல் எடையை அதிகரித்து ஆக வேண்டும். ஆனால் தினமும் ஒரு கிலோ உடல் எடை குறைந்து கொண்டே வருகின்றேன் என  வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் அய்குட் உடலின் அருகில் கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!