---Advertisement---

தியாகையரை இழிவு படுத்தியுள்ளார் கமல் – ஹெச் ராஜா டிவிட்டரில் கண்டனம்!

By Sri
Published on: May 6, 2020
---Advertisement---

விஜய் சேதுபதியுடனான தனது பேட்டியில் தியாகையர் பிச்சை எடுத்ததாகக் கூறி கமல்ஹாசன் பேசியது குறித்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஹெச் ராஜா.

சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதி கமலை நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் செய்தார். அப்போது விஜய் சேதுபதியின் ஒரு கேள்விக்கு கமல் ‘சினிமா டிக்கெட் வாங்கிக் கொண்டு காட்டப்படும் ஒரு வியாபாரம்தானே. தர்மத்துக்கு பாடும் பாட்டு இல்லை. தியாகையர் எப்படி ராமரைப் போற்றி, தஞாவூர் வீதிகளில் பிச்சை எடுத்த்துக்கொண்டு திரிந்தாரோ அப்படி பட்ட கலை இல்லை. எனக்கு கார் வாங்கவேண்டும், எம் ஜி ஆர் சிவாஜி போல ஆகவேண்டும் என ஆசை. அப்போது மக்களை மகிழ்விக்க மாட்டேன் என சொன்னால் என்ன வீம்பு?’ எனப் பதிலளித்தார்.

இந்நிலையில் கமலின் பேச்சு தியாகையரை இழிவு படுத்தியுள்ளதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரீகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசை பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்.’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இது என்ன சுற்றுலாத் தலமா? - லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ)

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!