---Advertisement---

2,327 காலி பணியிடங்கள்… குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு தொடங்கியது…!

By Sri
Published on: September 14, 2024
---Advertisement---

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வானது இன்று 38 மாவட்டங்களில் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு தொடங்கி இருக்கின்றது. துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளானது குரூப் 2 பிரிவில் வருகின்றது.

இதேபோன்று உதவியாளர்கள் உட்பட அமைச்சக பணியில் காலியாக இருக்கும் இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் வருகின்றன. குரூப் 2 பிரிவிலும் குரூப் 2ஏ பிரிவிலும் சேர்த்து மொத்தமாக 2,327 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அறிவிக்கையை அரசு பணியாளர் தேர்வாணையமானது வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் தேர்வை எழுதுகிறார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!