அரசு ஊழியர் ஒருவர் ஆறு வயது சிறுமியையும், அவரின் ஆட்டையும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை பக்கத்து வீட்டு நபர் வீடியோவாக எடுத்திருக்கின்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமியை 50 வயதான அரசு ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம், புலாந்சகர் நகர் பகுதியில் வசித்து வரும் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அந்த மாவட்ட விவசாயத்துறை அதிகாரியான கஜேந்திர சிங் மதுபோதையில் அத்துமீறி நடந்திருக்கின்றார்.
அவர் வீட்டிற்கு வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி பின்னர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். அந்த வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் வன்புணர்வு செய்திருக்கின்றார்.
இதனை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வீடியோ பிடித்து இணையத்தில் வெளியிடவே அது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கிலும் அரசு ஊழியரான கஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் வன்புணர்வை தடுக்காமல் வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.







