---Advertisement---

ஜி வி பிரகாஷ் தம்பதிக்கு பெண் குழந்தை! திரையுலகினர் வாழ்த்து!

By Sri
Published on: April 21, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடிகளான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஜி வி பிரகாஷ் தனது 17 வயதிலேயே வெயில் படத்தின் மூலம் இசையமைப்பளராக கோலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இசையில் தனது முத்திரையைப் பதித்த இவர் நடிகராகவும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இசை அளவுக்கு நடிப்பு அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சைந்தவிக்கு நேற்று அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி சமூகவலைதளத்தில் பரவவே பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.