---Advertisement---

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 19, 2024
---Advertisement---

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண் பெண் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பகோட்டை அருகே குகன் பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான ஆலை ஒன்றை இயங்கி வருகின்றது. இதில் 50-க்கும் மேற்ப அவர்கள் வேலை பார்க்கிறார்கள். இன்று காலை பணிக்கு வந்த அவர்களின் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.

அடுத்த வினாடி அங்கு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் வெடித்து சிதறியது.  அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த ராஜ் என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். இது குறித்து சக தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தீயிணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். உயிரிழந்த கோவிந்தராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!