கடந்த சில நாட்களாக மீடியாக்களில் அதிகம் அடிபட்ட பெயர் கமலா ஹாரிஸ். இவர் சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் கமலா ஹாரிஸ் அந்த நாட்டு துணை அதிபர் ஆகியுள்ளார்.
இவரின் பூர்விகம் தமிழ்நாட்டின் மன்னார்குடி என்பதால் இவரைப்பற்றி அதிகம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. இவரை பற்றி சரியாக அறியாதவர்கள் கூட கமலா ஹாரிஸ் தங்கள் உறவினர் போல் காண்பித்து கொண்டனர்.
இந்த அலை ஓய்வதற்கு முன் புதிய அலையாக ஈரோட்டை சேர்ந்த டாக்டர் ஒருவர் பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் ஈரோட்டை பூர்விகமாக கொண்ட டாக்டர் செலின் அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா பிரச்சினையை கட்டுப்படுத்தும் மருத்துவ குழு டாக்டர்களில் ஒருவராக இவரை அதிபர் ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார்.
இதனால் ஈரோடு பகுதி மக்கள் இவரை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.













