திரையுலகில் ஒரு படம் வெற்றி பெறுவதற்குப் பின்னால், நடிகர்களின் திறமைக்கும் தாண்டி சில நெகிழ்ச்சியான உண்மைகள் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு உண்மையைத்தான் மலையாளத்தின் “லேடி சூப்பர்ஸ்டார்” மஞ்சு வாரியர் சமீபத்தில் உடைத்திருக்கிறார். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் மெகா ஹிட் படைப்பான ‘அசுரன்’ படத்தில் அவர் நடித்தது வெறும் சான்ஸ் அல்ல, அது நம்ம தனுஷ் அண்ணா போட்ட பிடிவாதம்!

மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில், “தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பெரிய நம்பிக்கை. அதனால், கதை என்ன என்று கூட கேட்காமல் ‘அசுரன்’ படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன்” என்று கூறியதுதான் ஆரம்பம். ஆனால், இங்கேதான் அந்த ட்விஸ்ட்! நடிப்பில் எப்போதும் அசுர வேட்டை ஆடும் தனுஷ், “ஒரு ஆர்ட்டிஸ்ட் கண்டிப்பா கதையைக் கேட்கணும். இது ஒரு முக்கியமான படம்” என்று அடம் பிடித்து முழு ஸ்கிரிப்டையும் மஞ்சு வாரியருக்கு வாசிக்கச் சொன்னாராம்.மேலும், நட்பு வேறு, சினிமா வேறு என கூறியுள்ளார்.
உண்மையில், ‘அசுரன்’ ஒரு சாதாரண கதையல்ல. நிலம், சாதி, வன்முறை என அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் அசல் முகத்தோடு காட்டிய ஒரு ‘ரியலிஸ்டிக் மாஸ்டர்பீஸ்’. இங்கே சிவசாமியாக (தனுஷ்) இரண்டு தலைமுறையாக ஒடுக்கப்பட்ட ஒரு தந்தையின் கோபத்தையும், அதே சமயம் குடும்ப அமைதிக்கு ஏங்கும் ஒரு மனிதனின் தவிப்பையும் பார்க்க முடிந்தது. பச்சையம்மாவாக (மஞ்சு வாரியர்) வீட்டில் இருந்தே கணவனின் அமைதிக்கு எதிராகக் குமுறும் மனைவியின் பாத்திரம், பல எளிய பெண்களின் பிரதிபலிப்பு. இந்த எதார்த்தமான கதையை, எந்த சமரசமும் இல்லாமல் மஞ்சு வாரியர் புரிந்துகொண்டு நடிக்க வேண்டும் என்று தனுஷ் நினைத்தது, படத்தின் ஆழத்துக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை!
இந்த சம்பவம் சினிமாவை வெறும் வியாபாரமாகப் பார்க்காமல், ஒரு சமூகப் பதிவாகக் கருதும் கலைஞர்களின் மனதைக் காட்டுகிறது. ‘வெற்றிமாறன் – தனுஷ்’ காம்போ ஏன் எப்போதுமே ‘பஞ்ச்’ ஆக இருக்கிறது என்பதற்கு இதுதான் காரணம். ஒரு சூப்பர்ஸ்டார், இன்னொரு முன்னணி நடிகையை வெறும் பெயருக்காகத் திரைக்கு இழுக்காமல், “கதைதான் இங்க ஹீரோ” என்று நிரூபித்திருக்கிறார். ‘அசுரன்’ கொடுத்த மெசேஜைவிட, தனுஷின் இந்தச் செயல் பெரிய மெசேஜ்! சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது நம்முடைய ரத்தமும் சதையுமாய் இருக்கும் எதார்த்தம் என்பதை உணர்த்திய கெத்தான கலைஞன் தனுஷ்!