---Advertisement---

ரசிகர்களை ஏமாற்றிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தயாரிப்பாளர் வருத்தம்

By Sri
Published on: September 6, 2019
---Advertisement---

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் இன்று வெளியாகவில்லை.

கௌதம்மேனன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பணப்பிரச்சனை காரணமாக கடந்த பல மாதங்களாக வெளியாகாமல் இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதோடு, இப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படம் பணப்பிரச்சனை காரணமாக இன்றும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் இதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

enai nooki paayum thotta 2

செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை! இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே.

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.