---Advertisement---

ஓபிஎஸ் குறித்து பேச எதுவுமில்லை…ஈபிஎஸ் பதில்..

Published on: July 8, 2024
OPS EPS
---Advertisement---

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பமான நிலை இருந்து வருகிறது. அதிலும் கட்சியை யார் வழி நடத்துவது என்பதில் அதிகான போட்டி நிலவியது. சசிகலா, எடப்பாடி பழனிசாமி. ஓ.பண்ணீர் செல்வம் என மூவரும் மாறி மாறி அதிமுகவை சொந்தம் கொண்டாட போட்டி போட்டு வந்தனர்.

இது குறித்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. ஒரே கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி அறிக்கை விட்டும் வந்தனர். இந்நிலையில் தமிழக எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சி சார்ந்த முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவரே கட்சியின் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார்.

eps
eps

பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது என கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பண்ணீர் செல்வம் தெரிவித்தார்.

தலைமையை மாற்றினால் மட்டுமே கட்சி வெற்றி பாதைக்கு வரும் எனச் சொல்லியிருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் துவங்கி, 2021 சட்டமன்ற தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல்களில் பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்து, மூன்றாவது, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

ஓபிஎஸ்சின் கட்சித் தலைமை குறித்த கருத்திற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டார். அதே போல அவர் விலக்கவும் பட்டுவிட்டார். அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.