---Advertisement---

மது ஒழிப்பு மாநாடு… முறையாக அழைப்பு கொடுத்தா பங்கேற்போம்… எடப்பாடி பழனிச்சாமி முடிவு…!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு கொடுத்தால் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கின்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவிற்கு வந்து கலந்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நீங்கள் செல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கலந்து கொள்வது தொடர்பாக முடிவு எடுப்போம். நடிகர் விஜய்யும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா என தெரியவில்லை.

அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுவே இந்துக்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜயும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா என்று அவர் கூறியிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா மோகன், எம் எல் ஏ குமரகுரு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!