---Advertisement---

அரசு மருத்துவமனையில்… பெண்ணின் வயிற்றில் 5 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை..!

By Sri
Published on: October 6, 2024
---Advertisement---

அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.

மணப்பாறை அடுத்த வடுகபட்டி என்கின்ற கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரின்  வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளதால் உள்ள காமராஜர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். அங்கு மருத்துவர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அந்த பெண்ணின் வயிற்றில் கிட்டத்தட்ட மிகப்பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.

அந்த கர்பப்பை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதனிடையே ரத்தத்தின் அளவு 4 எச்பி மட்டுமே இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சராசரியாக 10-க்கு மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தார்கள்.

பின்னர் அந்த குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு தொடர்ந்து முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ரத்தத்தின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து தினமும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஹெச்பி 11 புள்ளிகளை கடந்த உடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றினார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நாடு முழுவதும் வழுக்கும் மருத்துவர்கள் போராட்டம்... நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு...!

அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் மஜிதா, விஜயா, மயக்கவியல் மருத்துவர் என பலரும் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ அளவிலான கட்டியை அகற்றினார்கள். இதையடுத்து அந்த பெண் அறுவை சிகிச்சைக்கு பின் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டார். அரசு மருத்துவமனை என்றால் பலரும் அலட்சியம் நிறைந்தது என்று கூறிவரும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கொண்ட சவாலான அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!