சென்னை திருவான்மீயூரை ஒட்டியுள்ள ஈஸிஆர் சாலைகளிலும் அதை சுற்றிய பகுதிகளிகும் சனிக்கிழமையானால் வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து கூத்தடிப்பது பலரின் வழக்கமாக உள்ளது.
அநாகரீகமாக குடித்து விட்டு திமிராக வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்துவது என்பது இப்பகுதியில் அடிக்கடி செய்யும் விசயமாகும்.
ஆண்கள் குடிப்பது மட்டுமல்லாமல் பெண்களும் தற்போதைய காலத்தில் அளவுக்கதிகமாக குடிப்பது, மற்றவர்களை திமிராக பேசுவது என செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் அடையாறு பகுதியை சேர்ந்த மருத்துவ தம்பதிகளின் மகளான காமினி என்ற பெண் அளவுக்கதிகமாக குடித்து விட்டு கார் ஓட்டியதோடு மட்டுமல்லாமல் தடுத்து நிறுத்திய போலீசாரை மிக மட்டமாக காது கூசும் கெட்டவார்த்தைகளால் பேசியுள்ளார்.
இது போலீசார் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. டிராபிக் போலீசாரையும் எட்டி உதைக்கும் அந்த பெண் சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணியமாக செயல்படும் காவலர்களிடம் இது போல் மிக திமிராக நடந்து கொண்ட பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பெண் மீதும் இவரின் ஆண் நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=nkaLblNnCSE
https://www.youtube.com/watch?v=nkaLblNnCSE













