---Advertisement---

ஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா – அதிரடி அறிவிப்பு

By Sri
Published on: September 18, 2019
Director bala
---Advertisement---

நடிகர் ஆர்.கே. சுரேஷை வைத்து இயக்குனர் பாலா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

விக்ரம் மகன் துருவை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. ஆனால் படம் முடிந்த நிலையில், அப்படத்திலிருந்து அவரை தூக்கிவிட்டு, வேறு இயக்குனரை வைத்து அப்படம் ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் மீண்டும் எடுக்கப்பட்டது.

எனவே, பாலா ஆர்யா, அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இடையில் சூர்யா பேரும் அடிபட்டது. ஆனால், தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜோஷப்’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பாலா தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது. மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.