சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் அதன் தலைவர் முக.ஸ்டாலின் முதல்வர் ஆனார். நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, உதயநிதி ஒரு ஓவியத்தை பரிசளித்துள்ளார் இந்த ஓவியத்தை வரைந்தது டாவின்ஸி என்ற ஓவியர் என்று கூறியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர்
ஸ்டாலின்
அவர்களுக்கு
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என உதயநிதி கூறியுள்ளார்.













