மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. ஜீது ஜோசப் இப்படத்தை இயக்கி இருந்தார் . இப்படம் தென்னக மொழிகளில் அனைத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது.
தமிழில் இப்படத்தில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து இருந்தார். இந்நிலையில் த்ரிஷ்யம் 2 படமும் இந்த ஆண்டு வெளிவந்து விட்டது. இதிலும் மோகன்லால் , மீனா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியானது.
த்ரிஷ்யம் 2 படத்தை வெங்கடேஷ் நடிக்க தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு வந்தது.
தெலுங்கில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனா, நதியா, எஸ்தர் அனில் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு த்ரிஷியம் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 25 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.









