---Advertisement---

தேனிசை தென்றல் தேவாவின் பாடல்கள் குறித்து ஒரு பார்வை

Published on: August 8, 2021
---Advertisement---
தேவாவை சிலர் காப்பி அடிப்பார்  என ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இன்று இருக்கும் இசையமைப்பாளர்கள் சிலரைவிட தேவா எவ்வளவோ நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்பதே உண்மை.
முதல் படமான மனசுக்கேத்த மகராசா படத்தில் இடம்பெற்ற ஆரங்கம் தாணுறங்க ஆறுகடல் மீனுறங்க பாடல் இன்றளவும் இரவு நேர தாலாட்டுப்ப்பாடலாக விளங்குகிறது.
இரண்டாவது படமான வைகாசி பொறந்தாச்சு படம் மெகா ஹிட்டானது அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் உட்கார்ந்தவ்ர் தேவா.
தேவாவின் வெற்றிகரமான பயணம் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஆரம்பித்தாலும் இவரை உச்சியில் ஏற்றி உட்காரவைத்தது இவர் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்திற்க்கு இசையமைத்ததுதான் படத்தின் பாடல்கள் இன்றளவும் ஹிட் குறிப்பாக படத்தின் டைட்டிலில் ரஜினிகாந்த் பெயர் போடும்போது ஹேய் ஹேய் என்று ஆரம்பிக்கும் அதிரடி இசையை கொடுத்திருப்பார் ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத டைட்டில் இசை அதே டைட்டில் கிட்டத்தட்ட ரஜினியின் சந்திரமுகி வரை தொடர்ந்தது.
செம மாஸான டைட்டில் பிஜிஎம் ஜேம்ஸ்பாண்ட் மியூசிக்கின் உல்டாவாக இருந்தாலும் நன்றாக இருக்கும். தேவாவின் இசையில் ரஜினி நடிப்பில் பாட்ஷா படம் சிறந்ததொரு மாஸான திரைப்படம் இன்றளவும் ரஜினிகாந்த் பெயரளவில் எந்திரன் என்று சொல்லிக்கொண்டாலும் பாட்ஷாதான் ரஜினி நடித்த மாஸ் படம் என்று அவருக்கே தெரியும் இதிலும் தேவா தன் திறமையான கை வரிசையை காட்டியிருப்பார்.
ரஜினியின் அருணாச்சலம் படத்திற்க்கும் தேவாவின் இசையே பிரதானம் வகித்தது.
இதனால்தான் கமல் தன்னுடைய அவ்வை சண்முகி படத்திற்க்கு மட்டுமல்லாது பம்மல் கே சம்பந்தம்,பஞ்சதந்திரம் போன்ற படங்களுக்கும் இவரை பயன்படுத்தி கொண்டார் அதிரடி பாடலில் தேவா எவ்வளவு வல்லவரோ அதைவிட மெலடி மெட்டுக்களில் அசத்துவார் .
அஜீத்குமாரின் வெற்றிப்படங்களான ஆசை, காதல் கோட்டை, வாலி,முகவரி போன்ற படங்களின் பாடல்கள் பின்னணி இசை போன்றவை தேவாவுக்கு மட்டுமல்லாது அஜீத்துக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
90களின் இறுதியில் தேவாவின் இசை கொடிக்கட்டி பறந்தது குறிப்பாக நினைவிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, ஊத்திக்கினு கடிச்சுக்கவா போன்ற பாடல்கள் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைத்தன பட்டிதொட்டியெங்கும் இவரின் பாடல்கள் ஒலித்தது.
மில்லினியம் இயர் என்று இரண்டாயிரமாம் ஆண்டுக்காக முகவரி படத்தில் அஜீத்குமார் தோன்றி நடித்த ஆண்டே நூற்றாண்டே பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தேவாவின் பாடல் புகழ் அனைத்தையும் அவருக்கே கொடுத்துவிட முடியாது அவரின் இசை உதவி புரிந்த அவரது தம்பிகளான சபேஷ் முரளியின் பங்கு பெருமளவில் இதற்க்கு உண்டு. தேவாவின் இசையில் சில பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம் அண்ணாமலை – ரெக்கை கட்டி பறக்குதய்யா, சாமுண்டி -மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு, மகாபிரபு – சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை ,தேவா – ஒரு கடிதம் எழுதினேன், புருஷலட்சணம் -செம்பட்டுப்பூவே, காதல் சொல்ல வந்தேன்-செம்பருத்தி செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளிப்போனாய் நினைவில்லையா, விஷ்ணு-சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா, மனசுக்கேத்த மகராசா-ஆரங்கம் தாணுறங்க ,சூரியன்-மன்னாதி மன்னர்கள் கதை கேட்டு பாரு ,அவ்வை சண்முகி -காதலி காதலி இன்னும் சொல்லலாம் இதில் தேவா இசையமைத்த காதல் சொல்லவந்தேன் பட பாடல் மிக மிக அருமையானது சுந்தர் சி இயக்கிய அந்த படம் வெளிவராமலேயே முடங்கி விட்டது வருத்தத்திற்குரியது.
காப்பி காப்பி என்று தேவாவின் இசையை பலர் கூறினாலும் அவை எல்லாம் சுவையான பில்டர் காபிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!