டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்லாமல் டெல்லி மாநிலத்தின் தலைநகரமும் கூட. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டமன்றத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதையை ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.
டெல்லி சட்டமன்றத்தில் இருந்து செங்கோட்டையை இணைக்கும் இந்த சுரங்கப்பாதையை புதுப்பித்து பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம்நாத் கோயல் கூறியுள்ளார்.













