டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.
இங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.
முழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.













