---Advertisement---

Prashanth Ranjan : வக்கீல் கோட்டில் டாப் ஸ்டார் – தியாகராஜன் – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ‘ரஞ்சன்’!

Published on: April 6, 2026
Actor Prashanth as Advocate Ranjan in the official first look poster of the film Ranjan The Advocate.
---Advertisement---

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு செம்ம மாஸான செய்தியை கொடுத்துள்ளார். ‘அந்தகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் – தி அட்வகேட்’ (RANJAN the advocate) என்ற படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கா ரூட்டட் கோர்ட் டிராமா என்பது படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போதே தெரிகிறது.

இந்த படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தியாகராஜன் – பிரசாந்த் – ஜிவி பிரகாஷ் என ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஒரு பெயின்ஃபுல் லவ் ஸ்டோரி மற்றும் உணர்ச்சிகரமான நீதிமன்ற காட்சிகளுடன் இந்த படம் உருவாக உள்ளது.

Actor Prashanth in a lawyer attire for his upcoming movie Ranjan The Advocate directed by Thiagarajan.
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் ‘ரஞ்சன் – தி அட்வகேட்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்.

 

சமீபகாலமாக பிரசாந்த் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் ‘ரஞ்சன்’ படமும் அவருக்கு ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் சில முக்கியமான பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கோர்ட் டிராமா கதையை இயக்குநர் தியாகராஜன் செதுக்கியுள்ளார்.

இந்த படத்தில் தேவயானியின் மகள் இனியா ராஜகுமரன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரசாந்தின் பிறந்தநாள் பரிசாக வெளியான இந்த அப்டேட் இப்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங். வக்கீல் உடையில் பிரசாந்தை பார்க்க அவரது ரசிகர்கள் இப்போதே ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வார சம்பளம்.. இன்சண்டிவ்... சென்னையை கலக்கிய செல்போன் திருட்டு கும்பல்..

இந்தத் திரைப்படம் 2025-ல் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘Court vs A Nobody’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?