---Advertisement---

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி… கட்டிடத்தை இடிக்க முடிவு… வெளியான அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: September 12, 2024
---Advertisement---

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று திணறல் ஏற்பட்டு ஆசிரியை உட்பட இரண்டு பேர் பலியாகின சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் இருந்து முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தை சிலர் அணுகி இருக்கிறார்கள். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசிக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாரும் பார்வையிட்டு முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத்துறை அனுமதி, தீயணைப்பு துறையின் தடையிலா சான்று, காவல்துறையின் அனுமதி என எந்த விதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்திருக்கின்றது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் பலியானதால் இந்த பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!