---Advertisement---

அறநிலையத்துறையை நிதி கொடுக்க விடாமல் தடுப்பு ! ஹெச் ராஜா பகிர்ந்த தகவல்!

By Sri
Published on: May 4, 2020
---Advertisement---

தமிழக அறநிலையத்துறை சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட இருந்த நிதி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்களும், நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் அளிக்க இருப்பதாக அறநிலையத்துறை ஆணையர் அறிவித்தார்.

ஆனால் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘இந்து அறநிலையத்துறை ஆணையர் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி கோவில்கள் பணமாற்றம் செய்ய உத்தரவிட்டது அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. டிரஸ்டிக்கள் இல்லாத சூழ்நிலையில் ஆணையர் உத்தரவு செல்லாது.எனவே உத்தரவை வாபஸ் பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க ஆணையருக்குஉயர் நீதிமன்றம் உத்தரவு.’ என தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.