தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. திறந்து இருந்த கோவில்கள் அனைத்தும் மீண்டும் அடைக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் முதல் முக்கிய கோவில்கள் அடைக்கப்பட்டு வருகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடுவார்கள். அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலும் நேற்று மதியம் முதல் பக்தர்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை.
கோவில்களில் நடக்கும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கோவில்களிலும் இதே நிலைமையே வரும் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பண பூஜைகள் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு அது சம்பந்தமாக காவேரி ஆற்றில் நடக்கும் வைபவங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.













