கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரனை இன்று நேரில் சந்தித்து, கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை நடத்த அனுமதி வழங்கக் கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.













