---Advertisement---

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி… பயணிகள் கடும் அதிர்ச்சி…!

By Sri
Published on: August 21, 2024
---Advertisement---

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் ரயிலில் தனது குடும்பத்துடன் சீரடிக்கு சுற்றுலாவுக்கு சென்று விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி இருக்கின்றார். அப்போது வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடித்து இருக்கின்றார்.

அது உணவு முழுமையாக சாப்பிட பிறகு இந்த பூச்சி இருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரயிலில் உள்ள பேன்ட்ரி காரில் புகார் செய்ய சென்றபோது குப்பை தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்பட்டது மற்றும் அங்கு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதை கண்டு மிக அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஜஸ்வானி தெரிவித்த போது எனது சகோதரி சைவ உணவு உண்பவர். அவர் சாப்பிட்ட பருப்பு குழம்பின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சியை கண்டபோது அவள் மொத்த உணவையும் சாப்பிட்டு முடித்து விட்டார். அதற்குள் எனது 80 வயது தந்தை உட்பட எனது குடும்பத்தினர் பருப்பு சாம்பாரை சாப்பிட்டார்கள்.

நாங்கள் புகார் செய்ய சென்றபோது குப்பை தொட்டிக்கு அருகில் உணவு தயாரிக்கப்பட்டதை பார்த்து மிக அதிர்ச்சி அடைந்தோம். ஏசி சேர் கார் சி5 கோர்ட்டில் பரிமாறப்பட்ட தயிர் கூடு கூடுதல் குறிப்புடன் கெட்டுப்போனது போல் இருந்தது” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க