---Advertisement---

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் உள்பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்று காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Sukanya wins legal battle as Madras High Court orders Sun TV Network to pay 10 lakh damages over 1096 Veerappan interview defamation.

30 ஆண்டுகால அவதூறுக்கு அதிரடி தீர்ப்பு! சன் டிவிக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்… நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

Official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy starring Santhosh and Samyuktha.

“காலைல 6 டூ மாலை 6 அவ ஒரு ரஜினி…” பகலில் பெண் இரவில் ஆண்! அவ்னி மூவிஸின் “டபுள் ஆக்குபென்சி” முரட்டு ட்ரெய்லர் இதோ!

Actor Dhanush and director Rajkumar Periasamy officially welcoming music composer Sai Abhyankkar on board for their upcoming project D55.

‘கச்சி சேரா’ அலை தனுஷ் படத்திலும் வீசப்போகிறது… “D55” இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த வண்டர்பார் ஃபிலிம்ஸ்!

Director Pa Ranjith and actor Arya locked to begin the prequel shooting of their blockbuster boxing movie franchise Sarpatta 2 from July 2026.

கபிலன் – வேம்புலி மோதலுக்கு பின்னால் இருக்கும் அசல் வரலாறு… ‘சார்பட்டா 2’ கதையில் பா.ரஞ்சித் வைத்த முரட்டு சர்ப்ரைஸ்… ஷூட்டிங் தேதி இதோ!

Director Nelson Dilipkumar updating the script layout for Superstar Rajinikanth's upcoming mega-sequel Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கதையை அதிரடியாக மாற்றிய நெல்சன்… இந்த வாரமே தொடங்கும் முரட்டு ஷூட்டிங்!

Mass Maharaja Ravi Teja in a rugged look from the official glimpse of his upcoming movie Irumudi Kattu directed by Shiva Nirvana.

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ பட மிரட்டலான வீடியோ அவுட்… பாசத்தில் உருக வைத்த அப்பா-மகள்… ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!