---Advertisement---

இதுவும் இப்படி சரி பண்ணுதே… கங்கை ஆற்றில் 3-வது முறையாக இடிந்து விழுந்த பாலம்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: August 17, 2024
---Advertisement---

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் மூன்றாவது முறையாக இடிந்து விழும் வீடியோவானது இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிஹாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் மூன்றாவது முறையாகவும் இடிந்து விழுந்து இருக்கின்றது. பீகார் மாநிலம், கஹேரியா மாவட்டத்தில் சுல்தான் கன்ச் மற்றும் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

9 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமான பணி ஆமை வேகத்தில் தான் நடந்து வருகின்றது. கட்டப்பட்டப்போதே கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை இந்த பாலம் இடிந்து விழுந்தது. இன்று மூன்றாவது முறையாக இப்பாலம் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்து இருக்கின்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். சமீப நாட்களாக பீகாரில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து வரும் நிலையில் தற்போது கங்கை ஆற்றில் பாலம் இடிந்து வரும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதை பார்த்த மக்கள் பலரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது மக்களின் உயிருக்கு அச்சறுதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Thug Life: A.R. Rahman Scores Mani Ratnam's Epic Gangster Saga Featuring Kamal Haasan

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க