---Advertisement---

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்! மருத்துவமனை சிகிச்சையின் நிலவரம்!

By Sri
Published on: April 10, 2020
---Advertisement---

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் நல்ல உடல்நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிவிட்டரில் அறிவித்த அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல்நிலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்... பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா...? கலாய்த்த ராகுல் காந்தி...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!