---Advertisement---

பிரதமர் மோடியின் பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்கள் …!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார். எளிமையான தொடக்கத்தில் ஆரம்பித்து தற்போது இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தனது 74 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார்.

அவர் இன்னும் பல வருடம் பொது சேவையில் இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மற்ற நாட்களைப் போலவே அவரது அதிகாரப்பூர்வ பொறுப்புகளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. பாரதிய ஜனதா கட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சேவா பரவ் என்ற இரண்டு வார விழாவில் பொது நலனில் பிரதமரின் நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்யும் அவரின் தத்துவத்தை எடுத்துரைக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி வழங்குகின்றது.

பிரதமர் மோடி தனது பிறந்த நாளை முன்னிட்டு புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் 26 லட்சம் பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகளை திறந்து வைக்க இருக்கின்றார். பின்னர் புவனேஷ் விமான நிலையத்தை வந்தடைந்ததும் பிரதமர் மோடி ஷைனிக் பள்ளிக்கு அருகில் உள்ள கடகனா குடிசை பகுதியில் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அதை தொடர்ந்து ஜனதா மைதானத்திற்கு செல்கின்றார். அங்கு சுபத்திரா யோஜனாவை தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பல பாஜக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பேசி வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.