---Advertisement---

அக்டோபர் 2-ல் த.வெ.க மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை… தொடங்கப்பட்ட ஏற்பாடு…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

அக்டோபர் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி சார்பாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை இந்த மாநாட்டில் பங்கேற்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் வீட்டில் இருந்து புறப்படும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் யூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவி இன்சூரன்ஸ், ஆர்சி புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று விஜய் தெரிவித்து இருக்கின்றார். இதுவரை நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஆவணங்கள் விஜய் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. தொண்டர்களின் போக்குவரத்து சிக்கலை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி இருக்கின்றார்.

மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சனையில் சிக்கினாலோ அதை தீர்ப்பதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறைந்தது 6,000 முதல் 10,000 பேரை அழைத்து வர வேண்டும் என்று கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையினரிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கும் தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்து இருக்கின்றது. மாநாடு மேடையில் விஜயுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் வெள்ளை நிற ஆடை அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 2-ம் தேதி மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை நடைபெறும் என்று அதிகார தகவல் வெளியாகி உள்ளது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!