---Advertisement---

இந்தியா முழுவதும் கைவரிசை… ஏடிஎம் கொள்ளையில் 70 பேர் கொண்ட கும்பல் கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 28, 2024
---Advertisement---

நாமக்கலில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலானது இந்தியா முழுவதும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்து விட்டு நாமக்கல் வழியாக கண்டைனர் மூலம் தப்பி ஓடிக்கொண்டிருந்த நபர்களை போலீசார் பிடித்தனர். இவர்கள் அனைவரும் கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களை கண்காணித்து அதை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்.

நாமக்கலில் பிடிபட்ட ஐந்து பேரிடம் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீஸார்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொள்ளை அடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியது தெரிய வந்தது. அப்போது அவர்களின் பெயர் முகவரிகளை மாற்றி கூறியிருக்கிறார்கள்,

ஆனால் அவர்களின் புகைப்படம் கைரேகை பதிவாகி இருந்தது. இவர்கள் கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி உள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.

மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இந்த கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!