---Advertisement---

கட்டுப்பாடுகளுடன் அண்ணாமலையார் தீபத்திருவிழா- பொதுமக்கள் அனுமதி இல்லை

Published on: November 2, 2021
---Advertisement---

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேரோட்டமும், சுவாமி மாட வீதி உலாவும் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 19ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

ஆன்மிக அன்பர்களின் உணர்வுகள் பாதிக்காதபடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அரசு திட்டமிடட்டுள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதையொட்டி, திருக்கோயில் இணையதளத்தில் கட்டணமில்லா முன்பதிவு செய்து இ-பாஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

இந்த இணையதளம் வரும் 6ம் தேதி முதல் செயல்படும். ஆதார் எண், முகவரி, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை பதிவேற்றி, இ-பாஸ் பெறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் இ-பாஸ் வழங்கப்படும். வரும் 18ம் தேதியும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் 19ம் தேதியும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. சுவாமி பல்லக்கு தூக்குவோர், கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கி, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நாளை மறுநாள் தொடங்கும் கார் பந்தயம்... இதெல்லாம் தான் கொண்டுவர தடை... பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு...!

விழா நிகழ்வுகள் முழுவதும் கோயில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு மூலம் விழாவை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும், வழக்கமான ஆன்மிக மரபுபடி மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். ஆனால், பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதியில்லை. அதேபோல், மாட வீதியில் தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலா, வெள்ளித் தேரோட்டம், தேர் திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். மேலும், மகா தீபத்தன்றும், பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!