---Advertisement---

Anirudh Interview : “ஒரு ஹிட் வொண்டராக இருக்க விரும்பல” – கொலவெறி பாடலுக்கு பின் அனிருத் பட்ட கஷ்டம்; 15 ஆண்டு பயணத்தை பகிர்ந்த ராக்ஸ்டார்!

By Sri
Published on: April 14, 2026
Rockstar Anirudh Ravichander sharing his career journey and sustainability thoughts during a 2026 press meet.
---Advertisement---

தமிழ் சினிமாவுல இப்போ இருக்குற டாப் மோஸ்ட் மியூசிக் டைரக்டர்னா அது நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான். ஆனா இவரோட ஆரம்பமே ஒரு மிகப்பெரிய சுனாமியா தான் இருந்துச்சு. 2011-ல தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்துல இருக்குற ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாட்டு மூலமா உலகளவில ஃபேமஸ் ஆனாரு அனிருத். அந்தப் பாட்டு ரிலீஸ் ஆகி இப்போ 15 வருஷத்தை நெருங்குற இந்த நேரத்துல, தன்னோட பழைய நினைவுகளையும் அப்போ இருந்த பயத்தையும் அனிருத் ஒரு பேட்டியில பகிர்ந்துருக்காரு.

“கொலவெறி பாட்டு ரிலீஸ் ஆனப்போ நான் ஒரு அண்டர் கிராஜுவேட் ஸ்டூடண்ட் தான். ஒரே ராத்திரியில என் வாழ்க்கையையே மாத்துன அந்த மொமெண்ட்டை என்னால மறக்கவே முடியாது. ஆனா அந்த நேரத்துல எனக்குள்ள ஒரு பெரிய டவுட் இருந்துச்சு. சினிமாவுல நிறைய பேர் ஒரே ஒரு பாட்டுல ஃபேமஸ் ஆகிட்டு அப்படியே காணாம போயிருக்காங்க. நாமளும் அந்த மாதிரி ஒரு ‘ஒன் ஹிட் வொண்டரா’ (One-hit wonder) ஆகிடக்கூடாதுங்கிறதுல நான் ரொம்பவே தெளிவா இருந்தேன்” அப்படின்னு அனிருத் சொல்லி இருக்காரு.

சினிமால ஒரு பெரிய இடத்தை பிடிக்கிறதை விட, பிடிச்ச இடத்துல நிலைச்சு நிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்னு அனிருத் புரிஞ்சு வச்சுருக்காரு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Suriya's Biopic Dropped! - சூர்யாவுடன் மிஸ் ஆன பயோபிக்.. வெங்கட் அட்லுரி வெளியிட்ட சீக்ரெட்!

ஒவ்வொரு ஆல்பம் பண்ணும்போதும் போன முறையை விட ஒரு படி மேல இருக்கணும்னு நெனச்சு தான் உழைச்சிருக்காரு. அந்தத் தொடர் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் இன்னைக்கு அவரை இந்தியாவே அண்ணாந்து பாக்குற ஒரு மியூசிக் ஐகானா மாத்திருக்கு. இப்போ இவரோட 15 வருஷ சினிமா பயணத்தை கொண்டாடுற விதமா ‘ராக்ஸ்டார் அனிருத் XV’ (Rockstar Anirudh XV) அப்படிங்கிற ஒரு பிரம்மாண்டமான கான்சர்ட் டூர் நடத்திட்டு இருக்காரு.

இதுமட்டும் இல்லாம ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ (Albuquerque Records) அப்படிங்கிற அவரோட சொந்த மியூசிக் லேபிளையும் லான்ச் பண்ணி இருக்காரு. ஒரு சின்ன காலேஜ் பையனா சினிமாவுக்குள்ள வந்து, இன்னைக்கு ரஜினி, விஜய்னு பெரிய ஹீரோக்களோட படங்களுக்கு ஆஸ்தான மியூசிக் டைரக்டரா அனிருத் வளர்ந்து நிக்குறது மத்த இளம் கலைஞர்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கு. ‘கொலவெறி’ பாட்டு ஒரு விபத்துனு சொன்னவங்களுக்கு முன்னாடி, 15 வருஷமா பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து இப்போ அனிருத் தன்னோட சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திட்டு வர்றாரு.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?

Editorial visual featuring Mirnaa discussing Rajinikanth's daily routine.

வெள்ளை நிற உணவுகளுக்குத் தடை! ‘ஜெயிலர் 2’ செட்டில் ரஜினியின் சீக்ரெட் டயட்: மிர்பனா ஓபன் டாக்!

Editorial visual featuring distributor Tiruppur Subramaniam addressing production delays.

கருப்பு, சர்தார் 2 படங்களின் தாமதத்திற்குப் பின் உள்ள அதிர்ச்சி உண்மை: திருப்பூர் சுப்பிரமணியம் பளீச்!