கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அமிதாப் பச்சன் தன்னை வீட்டுக்குள் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டு இது மூன்றாவது வாரம் . இதுவரை கிட்டத்தட்ட 150 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் நாட்கள் வைரஸ் பரவலைத் தடுக்கவேண்டிய முக்கியமான நாட்கள். அதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவற்றுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வற்புறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தன்னை மார்ச் 30 ஆம் தேதி வரை வீட்டுக்குள் தனிமைப்படுத்தப் படுத்திக் கொண்டுள்ளதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். தன்னைப் போலவே ரசிகர்களையும் அதுபோல வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.









