---Advertisement---

மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

By Sri
Published on: March 7, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பீதி இப்போது இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அதுபற்றிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு மாதமாக உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு சொல் உண்டென்றால் அது கொரோனா தான். இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 3500 க்கும் மேல். சீனாவில் முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 31 பேர் வைரஸ் தாக்குதல் அறிகுறிகளோடு உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் போலியாகவும் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மது அருந்தினால் இவ்வைரஸ் பரவலைத் தடுக்கலாம் என்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவ பலரும் அதை உண்மை என்று நம்பி பகிர ஆரம்பித்தனர். ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என  உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.