20 வருடத்துக்கு பின் அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து விலகியதால் மீண்டும் தாலிபான் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் கிலானி வேறு நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். தாலிபான்கள் முழுவதும் ஆட்சியை பிடித்துள்ளனர்.
நாங்கள் பெண்களுக்கு எதிராகவோ மக்களை கொல்லவோ, சொத்துக்களை கொள்ளையடிக்கவோ வரவில்லை அது எங்கள் நோக்கமில்லை என தாலிபான் முக்கிய தலைவர்கள் சொல்லி வருகின்றனர். பெண்களின் கல்வி சம்பந்தப்பட்ட விசயத்தில் எதிலும் தலையிட மாட்டோம் என கூறி வருகின்றனர்.
இருப்பினும் இவர்களின் செயல்பாடுகள் மோசமானதாய் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்போதே பல மக்கள் அகதிகளாய் வேறு வேறு நாட்டுக்கு ஓடி வருகின்றனர்.
இங்கு இருந்தால் மன நிம்மதியே இருக்காது என்பதே இவர்களினமக்களின் கருத்து மக்கள் நாட்டை விட்டு ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கன் மக்கள் மிகுந்த துன்பத்தில் தற்போது உள்ளனர்.













