---Advertisement---

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று மனித சங்கிலி போராட்டம்… திரண்ட நிர்வாகிகள்…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர் கழிவுநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு முறைகேடு ஆகியவற்றை கண்டித்து தமிழக முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் இன்று காலை 10:30 மணியளவில் அதிமுக மாவட்ட பொதுச்செயலாளர் நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ராயபுரம், எம்சி ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் பலரும் கைகோர்த்து கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை...!

இது மட்டும் இல்லாமல் வில்லிவாக்கம், கொளத்தூர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, சென்னை வால் டாக்ஸ் ரோடு, வேளச்சேரி, அசோக் நகர், மதுரவாயில், அம்பத்தூர், தென் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!