அதிமுகவில் ஏற்பட்ட யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சினைக்கு அக்டோபர் 7ம் தேதியான இன்று தீர்வு சொல்வதாக அமைச்சர் முனுசாமி அறிவித்தார்.
அதன்படி காலையில் இருந்து அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி அதிமுக தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் படையெடுத்தனர்.
சரியாக 9.45 மணிக்கு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் அறிவிக்கப்பட்டார். இதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமே அறிவித்தார்.
மேலும் சிவி சண்முகம்,காமராஜ், ஜேசிடி பிரபாகர்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













