---Advertisement---

கன்னட திரையுலகிலும் பாலியல் தொல்லை… கமிட்டி உருவாக்க நடிகைகள் முதல்வருக்கு கோரிக்கை..!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை இருப்பதால் அங்கும் கமிட்டி உருவாக்க வேண்டும் என்று நடிகைகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையானது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரையுலகை தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் பாலியல் தொந்தரவு நடப்பதாக தொடர்ந்து நடிகைகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

தமிழ் மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும் நடிகைகள் புகார் கொடுத்துள்ளனர். எனவே கர்நாடகா சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொழில் பற்றி புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்து விட்டார்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கன்னட இயக்குனர் கவிதா லங்கேஷ்கர் தலைமையிலான குழுவினர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அதில் கன்னட திரையுலகிலும் பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றது. இது குறித்தும் விரிவான விசாரணை செய்வதற்கு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.