---Advertisement---

Shocking Casting Couch Slap! — “வாய்ப்பு வேணும்னா ஒரு இரவு அட்ஜஸ்ட் பண்ணு!” நடிகையின் மரண செருப்படி பதில்!

By Sri
Published on: May 28, 2026
Actress Sai Tamhankar looking bold and sharing her shocking casting couch experience in a viral interview.
---Advertisement---

பொதுவாகவே, சினிமா உலகம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு எவ்வளவு பளபளப்பாகவும், பிரம்மாண்டமாகவும் தெரிகிறதோ, அதே அளவுக்கு அதன் பின்னணியில் பல இருண்ட பக்கங்களும் மறைந்துள்ளன. குறிப்பாக, புதுமுக நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் எதிர்கொள்ளும் மிக மோசமான ஒரு விஷயம் தான் இந்த ‘காஸ்டிங் கவுச்’ (Casting Couch) எனப்படும் பட வாய்ப்புகளுக்கான அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை. இந்த அசிங்கமான விளையாட்டுக்கு பயந்து பலரும் தங்களது வாய்ப்புகளை இழந்து மௌனமாக இருக்கும் நிலையில், ஒரு சில தைரியமான நடிகைகள் மட்டுமே இதற்கு எதிராக சாட்டையடி பதிலை கொடுத்து ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில், மராத்தி மற்றும் பாலிவுட் திரையுலகில் மிக முக்கிய நடிகையாக வலம் வரும் சாய் தம்ஹான்கர் (Sai Tamhankar), தனக்கு வந்த ஒரு அட்ஜஸ்ட்மென்ட் போன் காலிற்கு கொடுத்த மரண மாஸ் ரிப்ளை தான் இப்போ சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு பட வாய்ப்புக்காக சாய் தம்ஹான்கரை தொடர்பு கொண்ட ஒரு நபர், “நீங்க சினிமாவில் அடுத்த லெவலுக்கு போகணும்னா, பெரிய ஆளாகணும்னா.. கண்டிப்பா இந்த ஒரு படத்தோட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் ஒரு இரவை கழிக்க வேண்டியிருக்கும்” என்று மிகவும் சாதாரணமாக போனில் கேட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியான பேச்சைக் கேட்டதும் ஒரு நிமிடம் அமைதியான சாய் தம்ஹான்கர், அடுத்த நொடியே அந்த நபர் வாழ்க்கையில நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு வெறித்தனமான செருப்படி பதிலை கொடுத்துள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சாய், “சினிமாவில் பெரிய ஆளாகுறதுக்கு அதுதான் அவ்வளவு முக்கியம்னா.. முதல்ல உங்க சொந்த அம்மாவை ஏன் அவங்ககிட்ட அனுப்பி வைக்கக் கூடாது?” என்று முகத்தில் அடித்தார் போல் ஓப்பனாகக் கேட்டுள்ளார். சாய் தம்ஹான்கர் கொடுத்த இந்த அதிரடி பதிலைக் கேட்டு அந்த நபர் மறுவார்த்தை பேச முடியாமல் அப்படியே உறைந்து போய், உடனே போனை கட் செய்துள்ளார்.

இந்த மோசமான திரையுலக யதார்த்தத்திற்கு எதிராக சாய் தம்ஹான்கர் கொடுத்த இந்த போல்டான கமெண்ட், இன்றும் சினிமா வட்டாரங்களில் ‘காஸ்டிங் கவுச்’ கொடுமைக்கு எதிரான ஒரு மிகப்பெரிய சாட்டையடியாகவே பார்க்கப்படுகிறது. பாலிவுட், கோலிவுட் என எந்த எல்லையும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியிலும் நடக்கும் இந்த அசிங்கமான அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரத்திற்கு எதிராக சாய் தம்ஹான்கர் பேசிய இந்த பழைய பேட்டியின் சுவாரஸ்யமான பிளாஷ்பேக் தான் இப்போ இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களால் பயங்கர மாஸாக ஷேர் செய்யப்பட்டு, கமெண்ட்ஸ்களை அள்ளுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Sukanya wins legal battle as Madras High Court orders Sun TV Network to pay 10 lakh damages over 1096 Veerappan interview defamation.

30 ஆண்டுகால அவதூறுக்கு அதிரடி தீர்ப்பு! சன் டிவிக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்… நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

Official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy starring Santhosh and Samyuktha.

“காலைல 6 டூ மாலை 6 அவ ஒரு ரஜினி…” பகலில் பெண் இரவில் ஆண்! அவ்னி மூவிஸின் “டபுள் ஆக்குபென்சி” முரட்டு ட்ரெய்லர் இதோ!

Actor Dhanush and director Rajkumar Periasamy officially welcoming music composer Sai Abhyankkar on board for their upcoming project D55.

‘கச்சி சேரா’ அலை தனுஷ் படத்திலும் வீசப்போகிறது… “D55” இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த வண்டர்பார் ஃபிலிம்ஸ்!

Director Pa Ranjith and actor Arya locked to begin the prequel shooting of their blockbuster boxing movie franchise Sarpatta 2 from July 2026.

கபிலன் – வேம்புலி மோதலுக்கு பின்னால் இருக்கும் அசல் வரலாறு… ‘சார்பட்டா 2’ கதையில் பா.ரஞ்சித் வைத்த முரட்டு சர்ப்ரைஸ்… ஷூட்டிங் தேதி இதோ!

Director Nelson Dilipkumar updating the script layout for Superstar Rajinikanth's upcoming mega-sequel Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கதையை அதிரடியாக மாற்றிய நெல்சன்… இந்த வாரமே தொடங்கும் முரட்டு ஷூட்டிங்!

Mass Maharaja Ravi Teja in a rugged look from the official glimpse of his upcoming movie Irumudi Kattu directed by Shiva Nirvana.

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ பட மிரட்டலான வீடியோ அவுட்… பாசத்தில் உருக வைத்த அப்பா-மகள்… ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!