---Advertisement---

ஊரடங்கு நாளிலுமா ஆன்லைன் மோசடி? பல ஆயிரம் ரூபாய்களை இழந்த நடிகை!

By Sri
Published on: April 2, 2020
---Advertisement---

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை இழந்துள்ளார் நடிகை.

நடிகை சினேகா உல்லாள் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் ஊரடங்கின் போது அவர் தங்கள் வீட்டுத் தேவைக்காக ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பில் 25,000 ரூபாய் வந்துள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட கடையினர் பொருட்களை வீட்டுக்கே அனுப்பி வைப்பதாகவும் பணத்தை அங்கே கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் சில நிமிடங்களில் அவருக்கு மற்றொரு அழைப்பு வர, அதில் கடையில் பொருட்கள் கைவசம் இல்லை என்றும் குடோனில் இருந்துதான் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அவரது கிரெடிட் கார்டு விவரங்களையும் கேட்க அவர் அளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் அவரது அக்கவுண்ட்டில் இருந்து 25,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மறுபடியும் அந்த கடைக்கு போன் செய்து கேட்க அவர்கள் இரண்டாவது முறை அழைத்தது தாங்கள் இல்லை என சொல்லியுள்ளனர். அதன் பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற உண்மை சினேகாவுக்கு தெரிய வந்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!