---Advertisement---

நானும் விவசாயி தான்! எங்க சொந்தமண்ணல வேலை பார்க்கிறேன்!! வீடியோவை வெளியிட்ட வாரிசு நடிகை

By Sri
Published on: April 20, 2020
KeerthiPandiyan hot
---Advertisement---

தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான அருண்பாண்டியனின் வாரிசு என்பது தெரிந்ததே.

கீர்த்தி எப்பொழுதுமே சமூக வலைத்தள பக்கங்களில் கொஞ்சம் ஆக்டிவ் தான், அதுவும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னால் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் சிங்கில்ஸ் மத்தியில் மிகவும் வைரல். இதனை அடுத்து நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதையும் தொடர்ந்து அவர், இது எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சொந்த நிலமே தவிர வேறு எந்தவிதமான பகுதியும் அல்ல, நாங்கள் மிகவும் பொறுப்பாக இருக்கிறோம். என்னுடைய இடத்தில் என்னுடைய சொந்த மண்ணில் வேலையை நான் செய்கிறேன்!! என்று மிகவும் பொறுப்புடன் வீடியோவையும், மெசேஜையும் பதிவிட்டுள்ளார். தமிழ்சினிமாவில் நடிகைகள் இவ்வாறான வீடியோவை வெளியிட்டது இல்லை என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் கீர்த்தி வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Keerthi Pandiyan Tractorimage
Keerthi Pandiyan Tractorimage

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.