---Advertisement---

இந்த வருடத்தின் இரண்டாவது புயல்…? இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

இந்த வருடத்தின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் இது வடக்கு மற்றும் தெற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கரையோர பகுதியை அடுத்து இரண்டு தினங்களில் நெருங்குவதற்கு வாய்ப்புள்ளது.

அதன்படி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் புயலாக வலுப்பெற்று அடுத்து இரண்டு நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது புயலாக இது உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் உருவானால் பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!

Lady Superstar Nayanthara in a traditional intense look amid rumors of her joining Raghava Lawrence's horror-comedy Kanchana 4 for a powerful flashback role.

Horror Combo Strike: “ராஷ்மிகா இல்ல… இப்போ நயன்தாரா!”… லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்ட்ரி? திரையரங்குகளை அதிர வைக்கப்போகும் பிளாஷ்பேக் ட்விஸ்ட்! கோலிவுட் ஹாட் நியூஸ்!

Director Sarkunam and Thalapathy Vijay official archival asset tracking unmade commercial script Ayyanar featuring Vadivelu and Nana Patekar.

Dropped Flashback Reveal: “நீலாங்கரை வீட்டுக்கு கூப்பிட்டு கதை கேட்ட விஜய்!”… வடிவேலு காமெடி, நானா படேகர் வில்லன்! இயக்குநர் சற்குணம் விஜய்க்காக எழுதின ‘அய்யனார்’ மாஸ் படம் ஏன் டிராப் ஆச்சு?

Director Rathna Kumar emotional statement after the massive global success of 29 movie on Netflix OTT.

Emotional Healing Wave: “தியேட்டர்களில் மிஸ் பண்ணதுக்கு சாரி!”… நெட்ஃபிளிக்ஸ் ரிலீசுக்கு பின் ’29’ படத்திற்கு குவியும் உலகளாவிய பாராட்டு! ரசிகர்களின் எமோஷனல் கடிதங்களால் உருகிய ரத்னகுமார்!

Actor Jiiva in a rural politician avatar amid rumors of Super Good Films planning Thalaivar Thambi Thalaimayil 2 as their 100th landmark movie.

Milestone Century Choice: “100-வது படத்திற்கு தரமான பிளான்!”… ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில் 2’! கோலிவுட்டை அதிர வைக்கும் மெகா அறிவிப்பு!

Actor Vijay Antony speaking emotionally about director Sasi at the promotional event of their upcoming movie Nooru Saami.

Nostalgia & Emotion Mix: “என் வாழ்க்கையின் 3 முக்கிய மைல்கற்கள்!”… ‘நூறு சாமி’ மேடையில் இயக்குநர் சசி குறித்து நெகிழ்ந்து உருகிய விஜய் ஆண்டனி! குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!